சாப்பிட சென்ற டிரைவர்… லாரி கேபினட்டில் பிடித்த தீ… தப்பிய 8 சொகுசு கார்கள்…!!

ராணிப்பேட்டை மாவட்டம் அம்மணதாங்கல் அருகே உள்ள சென்னை-பெங்களூர் தேசிய நெருஞ்சலையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே ஒரு கண்டெய்னர் லாரி நின்று கொண்டிருந்தது. அந்த லாரியின் முன்பக்கத்தில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது. இதனை பார்த்த அப்பகுதியினர் உடனைடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ராணிப்பேட்டை தீயணைப்பு உதவி மாவட்ட அலுவலர் திருமுருகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் லாரியின் முன்பக்கத்தில் எரிந்த தீயை போராடி அணைத்தனர். இதுகுறித்து போலீசார் லாரியின் டிரைவர் சோனு யாதவ் என்பவரிடம் நடத்திய விசாரணையில் அந்த கண்டெய்னர் மகாராஷ்டிரா நாசிக்கில் இருந்து 8 சொகுசு கார்களை ஏற்றிக்கொண்டு சென்னை துறைமுகத்திற்கு சென்று கொண்டிருந்தது தெரியவந்தது.

இந்நிலையில் அவர் சாப்பிடுவதற்காக லாரியை சாலையில் நிறுத்தி விட்டு சாப்பிட சென்ற போது லாரி தீப்பிடித்து எரித்ததாக தெரிவித்துள்ளார். லாரியின் கேபினில் மின்கசிவு ஏற்பட்டு தீ பிடித்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். மேலும் தீயணைப்பு வீரர்கள் தக்க சமயத்தில் தீயை அணைத்ததால் கன்டெய்னரில் இருந்த சொகுசு கார்கள் சேதமின்றி தப்பியது.

Related posts

“அலைபாயுதே” படம் போல திருமணம்…பெண்ணை சிறைபிடித்து தாய்… வீட்டில் இருந்து தப்பியோட்டம்…!!

உரியஇழப்பீடு வழங்க வேண்டும்… தேசிய ஆணையம் நோட்டீஸ்… மாஞ்சோலை தொழிலாளர்கள் வேதனை…!!

பலத்த காற்றுடன் மழை… திருப்பி அனுப்பட்ட விமானங்கள்… பயணிகள் அவதி…!!