செய்திகள் தென்காசி மாவட்ட செய்திகள் தோட்டத்திற்குள் புகுந்த யானை… காவலாளிக்கு ஏற்பட்ட விபரீதம்… ஊர்மக்கள் போராட்டம்…!! Revathy Anish13 July 2024041 views தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சொக்கம்பட்டி பகுதியில் மூக்கையா என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள பாண்டி என்பவருடைய தோட்டத்தில் 12 ஆண்டுகளாக காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சில தினங்களாக இரவு நேரங்களில் அப்பகுதி தோட்டங்களில் யானை ஒன்று சுற்றித்திரிந்து வந்தது. எனவே சம்பவத்தன்று இரவு மூக்கையா மற்றும் தோட்ட உரிமையாளர் பாண்டி இருவரும் தோட்டத்திற்கு சென்றனர். அப்போது ஒன்றை யானை ஒன்று தோட்டத்திற்குள் புகுந்தது. இதை பார்த்த மூக்கையா யானையை விரட்ட முயன்றபோது யானை அவரை நோக்கி வந்தது. இதனால் அச்சமடைந்த மூக்கையா மற்றும் பாண்டி அங்கிருந்து தப்பியோட முயன்றனர். ஆனால் அந்த யானை மூக்கையாவை துரத்தி சென்று மிதித்தது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். தோட்ட உயிரிமையாளர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூக்கையா உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த மூக்கையா குடும்பத்தினர் மற்றும் ஊர் மக்கள் அப்பகுதியில் திரண்டு அவரது உயிரிழப்பிற்கு இழப்பீடு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து வனத்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்திருப்பதாக தெரிவித்தார். இதற்குப்பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றனர்.