செய்திகள் சக தொழிலாளி என நினைத்த தந்தை… சிறுமி கர்பமடைந்ததால் அதிர்ச்சி… போக்சோவில் கைது…!! Revathy Anish1 July 2024074 views சென்னை பெரும்பாக்கம் பகுதியில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இவரது தந்தை பெயிண்டராக வேலைபார்த்து வந்த நிலையில் எழில்நகரை சேர்ந்த பெயிண்டர் அருள்ராஜ் என்பவர் அடிக்கடி அந்த சிறுமியின் வீட்டிற்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். இதனால் சிறுமிக்கும் அருள்ராஜுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில் அருள்ராஜ் சிறுமியிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி நெருக்கமாக இருந்துள்ளர். இதனால் சிறுமி கர்பமடைந்தார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் அருள்ராஜ் மீது பெரும்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் போலீசார் அருள்ராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.