மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சில தினங்களாக கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில் தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்த கனமழையினால் அருவிகளில் தண்ணீர் ஆக்ரோஷமாக கொட்டி தீர்த்தது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் 2 தினங்களாக மழை குறைந்த நிலையில் அருவிகளின் நீர் வரத்தும் குறைய தொடங்கியது. எனவே பழைய குற்றாலம், பெயின் அருவி, ஐந்தருவி, புலி அருவி ஆகிய அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் சனி, ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகை தந்தனர். இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு பணிக்காக வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.