Home செய்திகள் அச்சுறுத்தும் காட்டு யானைகளை… கும்கி யானைகள் கொண்டு விரட்டும் வனத்துறையினர்…!!

அச்சுறுத்தும் காட்டு யானைகளை… கும்கி யானைகள் கொண்டு விரட்டும் வனத்துறையினர்…!!

by Revathy Anish
0 comment

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களான நெல்லிக்குன்னு, காரக்குன்னு, அஞ்சுக்குன்னு, செறுமுள்ளி, கவுண்டன்கொல்லி, கொட்டாய் மட்டம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. அப்பகுதியில் உள்ள விளைநிலங்கள், வீட்டிற்கு அருகே நிற்கும் வாகனங்களை சேதப்படுத்தி வருகிறது. இது குறித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து 16-வது நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை அறிந்த வனத்துறையினர் முதுமலையிலிருந்து 4 கும்கி யானைகள் அழைத்து வரப்பட்டு காட்டு யானைகளை விரட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே நேற்று காரக்குன்னு, கொட்டாய் மட்டம் பகுதிகளில் காட்டு யானைகள் புகுந்து பகுதியில் பயிரிடப்பட்ட நெற்பயிர்களை சேதப்படுத்தியது. இதனையடுத்து கூடலூர் வனச்சரக அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் வனத்துறையினர் கும்கி யானைகள் உதவியுடன் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.