தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல்… 10 தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை… 3 மாநில போலீசார் தீவிரம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பாகலூர் சாலையில் ஐ.டி.பி.ஐ வங்கியின் ஏ.டிஎம் ஒன்று செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று அங்கு எவ்வித பண பரிவர்த்தனையும் நடைபெறாததால் வங்கி ஊழியர்கள் அங்கு சென்று பார்வையிட்டனர். அப்போது ஏ.டி.எம் இயந்திரம் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 14.50 லட்சம் ரூபாய் திருட்டுபோய் இருந்துள்ளது. இதுகுறித்து ஊழியர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் தடயவியல் நிபுணர்களையும் வரவழைத்து அங்கு பதிவான கைரேகைகளை கைப்பற்றினர். இந்நிலையில் இதே போன்ற கொள்ளை ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் நடைபெற்ற நிலையில் அங்கு பதிவான கைரேகைகளை வைத்து சோதனை செய்ததில் இந்த 3 கொள்ளைகளையும் நிகழ்த்தியது ஒரே கும்பல் என தெரியவந்துள்ளது.

மேலும் 3 மாநில போலீசார் இணைந்து சுமார் 10 தனிப்படைகளை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த கொள்ளை கும்பல் அரியானா, டெல்லி, கர்நாடக கல்புர்க்கி போன்ற பகுதிகளை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!