வீட்டிற்குள் புகுந்த கும்பல்… வீட்டாருக்கு காத்திருந்த அதிர்ச்சி… கிருஷ்ணகிரி அருகே பரபரப்பு…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் கண்ணன்டஹள்ளி அருகே உள்ள கெட்டம்பட்டி பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். தற்போது இவர் பெங்களூரில் உணவகம் ஒன்றில் வேலை பார்த்து வந்த நிலையில் அவரது மனைவி சித்ரா(60) வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று சித்ரா கணவரை பார்க்க பெங்களூருக்கு சென்றிருந்த நிலையில், மர்ம நபர்கள் சிலர் அவரது வீட்டை உடைத்து பீரோவில் இருந்த 40 பவுன் தங்க நகை, 750 கிராம் வெள்ளி, 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பி ஓடினர்.

இது குறித்து தகவல் அறிந்த சித்ரா உடனடியாக வீட்டிற்கு திரும்பி வந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையின் பொது அதேபகுதியில் வசித்து வரும் கௌரப்பன் என்பவரது வீட்டிலும் இரவு மர்மநபர்கள் புகுந்து 14 பவுன் தங்க நகைகளை திருடிக் கொண்டு சென்றது தெரியவந்துள்ளது. இந்த இரண்டு வழக்கையும் போலீசார் பதிவு செய்து தப்பியோடிய கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!