செய்திகள் திருப்பத்தூர் மாவட்ட செய்திகள் பூந்தொட்டிக்குள் இருந்த கஞ்சா செடி… மனைவி செய்த சிறப்பான செயல்… கணவர் கைது…!! Revathy Anish19 July 20240128 views திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை இடையாம்பட்டி பகுதியில் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த சிவபிரசாத்(36) மற்றும் அவரது மனைவி ஜான்சி ஆகியோர் தங்களது 2 பெண் குழந்தையுடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சிவப்பிரசாத் கஞ்சா விற்கு அடிமையாகி வீட்டிலேயே கஞ்சா செடியை வளர்த்து அதை பயன்படுத்தி வந்துள்ளார். இதனையடுத்து அவர் கஞ்சா போதையில் அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. மேலும் கணவன் கஞ்சாவிற்கு அடிமையானதால் ஜான்சி ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிவபிரசாத்தை கைது செய்தனர். இதை தொடர்ந்து அவர் வீட்டில் வளர்த்த கஞ்சா செடிகளையும் பறிமுதல் செய்தனர்.