அரியலூர் செய்திகள் மாவட்ட செய்திகள் தனியாக இருந்த சிறுமி… 3 முதியவர்கள் செய்த கொடூர செயல்… போக்சோ சட்டத்தில் கைது…!! Revathy Anish24 July 2024089 views அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கிராமத்தில் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 21ஆம் தேதி பள்ளி விடுமுறை என்பதால் சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை அறிந்த அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன்(65), பன்னீர்செல்வம்(76), சின்னத்தம்பி(70) ஆகியோர் சிறுமியின் வீட்டிற்கு சென்று அவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனையடுத்து சிறுமியின் தாய் மாலையில் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பினார். அப்போது சிறுமி அழுதுகொண்டே நடந்த விபரத்தை தாயிடம் கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் 1098 எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் துறையினர் ராஜேந்திரன், பன்னீர் செல்வம், சின்னத்தம்பி ஆகிய 3 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.