கள்ளக்காதலை தட்டிக்கேட்ட கணவன்… குடும்பத்துடன் சேர்ந்து தாக்கிய மனைவி… போலீசார் அதிரடி நடவடிக்கை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் அத்தியூர் அண்ணாநகர் பகுதியில் சுகந்தி என்பவர் அவரது 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் சுகந்தியின் கணவர் பிரபு வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். இதனையடுத்து பிரபுவிற்கு கள்ளக்காதல் குறித்து தெரிந்ததால் சுகந்தியை கண்டித்துள்ளார்.

இதனால் இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மனைவி சுகந்தி, மாமனார் செல்வம், மாமியார் சுமதி, மைத்துனர் அறிவழகன் ஆகியோர் பிரபுவை தாக்கியுள்ளனர். இதுகுறித்து பிரபு அளித்த புகாரின் அடிப்படையில் வடபொன்பரப்பி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சுகந்தி மற்றும் சுமதியை கைது செய்தனர். மேலும் செல்வன் மற்றும் அறிவழகன் தலைமறைவானதால் அவர்களை தேடி வருகின்றனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!