செய்திகள் தென்காசி மாவட்ட செய்திகள் தூக்கமாத்திரை கலந்து கொடுத்த கணவன்… மனைவிக்கு நேர்ந்த கொடூரம்… தென்காசி அருகே பரபரப்பு…!! Revathy Anish16 July 2024095 views தென்காசி சொர்ணபுரம் தெருவில் மஸ்தான் என்பவர் எனது மனைவி பாத்திமா மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். மாற்றுத்திறனாளியான இவர் சம்பவத்தன்று தென்காசி கிராம நிர்வாக அதிகாரி சுரேஷிடம் தன் மனைவியை கொலை செய்து விட்டதாக சரணடைந்தார். இது குறித்த அவர் அளித்த தகவலின் அடிப்படையில் தென்காசி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மஸ்தான் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது பாத்திமா கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் உயிரிழந்து காணப்பட்டார். இதுகுறித்து போலீசார் மஸ்தானிடம் நடத்திய விசாரணையில் மஸ்தான் பாத்திமாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவ்வப்போது தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் பாத்திமா 1 மாதத்திற்கு முன்பு தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மஸ்தான் மீது புகார் அளித்துள்ளார். இதனையடுத்து போலீசார் கணவன்-மனைவி இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் காவல்நிலையத்தில் தன் மீது புகார் அளித்ததால் ஆத்திரத்தில் இருந்த மஸ்தான் நேற்று முன் தினம் கடையில் இருந்து பரோட்டா குருமா வாங்கி வந்து அதில் தூக்க மாத்திரை கலந்து பாத்திமாவிற்கு கொடுத்துள்ளார். இதனை சாப்பிட்டுவிட்டு நன்றாக உறங்கிய பாத்திமாவின் கழுத்தை சேலையை வைத்து இறுக்கி கொலை செய்ததாக தெரிவித்தார். இதனையறிந்த போலீசார் மஸ்தானை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.