ஆந்திரா மாநிலம் தெனாலி பகுதியில் இயங்கும் அரசு பேருந்தில் சுதாகர் ராவ் என்பவர் நடத்துனராக பணிபுரிந்து வருகிறார். இவரது பேருந்தில் ஏறும் பயணிகளை இவர் கைகூப்பி வணங்கி வரவேற்றும், அவர்கள் இறங்கும் போதும் எங்கள் பேருந்தில் பயணம் செய்ததற்கு நன்றி என பயணிகளிடம் கனிவுடன் நடந்து கொள்கிறார்.
மேலும் பயணிகளுக்கு டிக்கெட் கொடுக்கும் போது பயணிகளிடம் அன்புடன் சிரித்து பேசுகிறார். பேருந்து கிளம்பும் போது உங்கள் பயணம் சிறக்க எனது வாழ்த்துகள் என பயணிகளின் நாளையே சிறப்பாக மாற்றுகிறார். இதனை பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார்.
இதனை பார்த்த அனைவரும் நடத்துனர் சுதாகர் ராவ்க்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் ஆந்திரா போக்குவரத்துதுறை அமைச்சர் ராம் பிரசாத் ரெட்டி அந்த நடத்துடருக்கு மனம் நிறைந்த பாராட்டுகளையும், உங்கள் சேவை தொடர என் வாழ்த்துகள் என கூறியுள்ளார்.