ஈரோடு செய்திகள் மாவட்ட செய்திகள் சாலையில் படுத்திருந்த சிறுத்தை… வாகன ஓட்டி செய்த செயல்… எச்சரித்த வனத்துறையினர்…!! Revathy Anish25 June 2024084 views ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள திம்பம் மலைப்பாதையில் இரவு நேரங்களில் சிறுத்தை மற்றும் வனவிலங்குகளில் நடமாட்டம் அதிகமாக காணப்படும். இந்நிலையில் 27 கொண்டை ஊசி வளைவுள்ள இந்த மலைப்பாதையில் 17-வது கொண்டை ஊசி வளையில் ஒரு சிறுத்தை தடுப்பு சுவரில் படுத்து கொண்டிருந்தது. இதனை பார்த்த அப்பகுதி வழியாக சென்ற வாகனஓட்டி ஒருவர் வாகனத்தை நிறுத்தி செல்போனில் சிறுத்தை சாலையை கடந்து மறுபுறத்திற்கு செல்லும் வரை வீடியோவாக எடுத்து பதிவிட்டார். இதனை பார்த்த வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதிகளில் வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக செல்ல வேண்டும் எனவும், தேவையில்லாமல் வாகனங்களை நிறுத்தி சாலையில் நிற்க கூடாது எனவும் தெரிவித்துள்ளனர். இதுபோல் வாகனத்தை நிறுத்தி செல்போனில் வீடியோ எடுப்பது மிகவும் ஆபத்தானது, எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.