தமிழ்நாடு அரசு பேருந்து கழகத்தின் சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் 23 புதிய அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அப்போது பேசிய அமைச்சர் சிவசங்கர் போக்குவரத்து துறையில் உள்ள காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றும், தமிழகத்தில் இயங்கி வரும் பழைய அரசு பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.
இதனையடுத்து மற்ற மாநிலங்களில் டீசல் விலை ஏறும் போதெல்லாம் பேருந்து கட்டண தொகையை உயர்த்தி வருவார்கள். ஆனால் தமிழகத்தில் மட்டும் தான் பேருந்து கட்டணம் அதிகமாக உயர்த்தப்படுவது இல்லை. மேலும் மகளிர் விடியல் பயணத்தின் செலவாகும் தொகையை தமிழக முதலமைச்சர் வழங்கி வருகிறார். இதைத்தொடர்ந்து தமிழக சட்ட-ஒழுங்கு குறித்து விமர்சித்து வரும் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் வட மாநிலங்களுக்கெல்லாம் சென்றதில்லை என்று நினைக்கிறேன். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பாக இருப்பதால் தான் அவர் நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறார் என அமைச்சர் கூறியுள்ளார்.