செய்திகள் திருச்சிராப்பள்ளி மாவட்ட செய்திகள் கடன் தொல்லையால் குழந்தைகளை கொன்ற தாய்… கடைசியில் எடுத்த முடிவு…!! Revathy Anish25 July 2024077 views திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியில் உள்ள காமராஜர் காலனியில் கிருஷ்ணமூர்த்தி-கிருத்திகா(31) தம்பதியினர் வசித்து வருகின்றனர் இவர்களுக்கு சாய் நந்தினி(11) என்ற மகளும், கோகுல்நாத்(14) என்ற மகனும் உள்ளனர். கிருத்திகா குடும்ப தேவைக்காக மகளிர் சுய உதவிக் குழுவில் கடன் வாங்கி திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மன உளைச்சலில் இருந்துள்ளார். சம்பவத்தன்று இரவு கிருஷ்ணமூர்த்தி வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியபோது கிருத்திகா தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். அவரது மகன் மற்றும் மகளும் வீட்டில் இறந்து கிடந்தனர். இது குறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசரின் முதற்கட்ட விசாரணையில் கடன் தொல்லை அதிகமானதால் விரக்தியில் கிருத்திகா இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிட்டு, அவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.