நாடு முழுவதும் நேற்று 78-வது சுதந்திர தின விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலான சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள 142 அடி உயரம் கொண்ட ராஜ கோபுர கோபுரத்தில் இந்திய தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது. வருடந்தோறும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழாவில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கீழ் கோபுரத்தில் தேசியக் கொடியேற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.
அதன் அடிப்படையில் நேற்று நடராஜன் திருவடிகளில் தேசிய கொடியை வைத்து பூஜை செய்து மேளதாளங்களுடன் செயலர் வெங்கடேச தீட்சிதர் தலைமையில் கோவில் ராஜ கோபுரத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. இதனை பக்தர்கள் அனைவரும் கண்டு களித்தனர்.