புதிய சட்டங்கள் சட்ட விரோதமானது… நீதிமன்றத்தில் மனு அளித்த ஆர்.எஸ். பாரதி… இன்று விசாரணை…!!

மத்திய அரசால் ஜூலை 1-ஆம் தேதி 3 புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இதற்கு தி.மு.க சார்பில் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் ஒன்றை செய்துள்ளார். அந்த மனுவில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்கள் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு இந்தி மற்றும் சமஸ்கிருதத்தில் இந்த சட்டங்களை நிறைவேற்றி இருப்பது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது.

மேலும் நாடாளுமன்றத்தில் மாநிலங்களின் கருத்தை கேட்காமலும், எவ்வித விவாதங்களின்றி அமல்படுத்தப்பட்ட இந்த சட்டங்களை சட்டவிரோதமானது, தன்னிச்சையானது என அறிவிக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் மற்றும் எஸ் எஸ் சுந்தர் ஆகியோரின் அமர்வில் இன்று விசாரணை நடத்தப்பட உள்ளது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!