கடலூர் செய்திகள் மாவட்ட செய்திகள் வீட்டில் படுத்திருந்த மூதாட்டி… காத்திருந்த அதிர்ச்சி… மர்மநபர்களுக்கு வலைவீச்சு…!! Revathy Anish24 July 2024082 views கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்துள்ள மணவெளி பகுதியில் பூபதி(70) என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவரது மகன்கள் அனைவரும் வெளியூரில் வசித்து வருவதால் மூதாட்டி வீட்டில் தனியாக இருந்துள்ளார். சம்பவத்தன்று இரவு மூதாட்டி தூங்கி கொண்டிருந்தபோது மர்மநபர்கள் சிலர் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கினர். இதனையடுத்து பீரோவில் இருந்த 20 பவுன் நகை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிக்கொண்டு தப்பியோடி உள்ளனர். மறுநாள் விடிந்ததும் பீரோ உடைக்கப்பட்டு இருந்ததையும் நகை, பணம் காணாமல் போனதையும் பார்த்து மூதாட்டி அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து மூதாட்டி புவனகிரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.