தலைமறைவாக இருந்த அஞ்சலை… மடக்கி பிடித்த போலீசார்… தீவிர விசாரணை…!!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளிகளிடம் நடத்திய விசாரணையில் முக்கிய குற்றவாளிகள் 3 பேர் சிக்கினார். அதில் ஏற்கனவே வழக்கறிஞர்களான மலர்க்கொடி மற்றும் ஹரிஹரன் கைதாகி உள்ளனர். இந்நிலையில் ஆற்காடு சுரேஷின் மனைவியும், பாஜக பெண் பிரமுகருமான அஞ்சலை தலைமறைவாக இருந்தார். அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.

தற்போது தலைமறைவாக இருந்த அஞ்சலையை காவல்துறையினர் மடக்கி கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே அஞ்சலையை பாஜக கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!