கோயம்புத்தூர் செய்திகள் மாவட்ட செய்திகள் பாலியல் தொல்லை கொடுத்த தபால் நிலைய அலுவலர்… பெண்ணின் உறவினர் செய்த காரியம்…!! Revathy Anish22 July 20240109 views கோவையில் உள்ள தபால் நிலையம் ஒன்றில் தபால் நிலைய அதிகாரியாக சூலூர் பகுதியை சேர்த்த விஜயகுமார்(44) என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் அங்கு பணிபுரிந்த 21 வயது பெண் ஊழியர் ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சடைந்த பெண் உடனடியாக கூச்சல் போட்டதால் விஜயகுமார் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதனையடுத்து அந்த பெண் தனது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர் உத்தமன் என்பவர் விஜயகுமாரை பிடித்து கத்தியால் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் பாதிக்கப்பட்ட பெண் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்த விஜயகுமாரை கைது செய்துள்ளனர். இதை தொடர்ந்து விஜயகுமாரை தாக்கிவிட்டு தலைமறைவான உத்தமன் என்பவரையும் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.