மீன்களின் விலை குறைவு… அள்ளிச்செல்லும் மக்கள்… உக்கடம் மார்க்கெட்டில் அலைமோதும் கூட்டம்…!!

கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொதுமக்கள் மீன் வாங்குவதற்கு கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். இந்த மீன் மார்கெட்டிற்கு தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமேஸ்வரம், கேரளா போன்ற பகுதிகளில் இருந்து விற்பனைக்காக பல விதமாக மீன்கள் வருவது வழக்கம்.

இந்நிலையில் தற்போது மீன்களில் விலை சற்று குறைந்துள்ளதால் அனைவரும் போட்டிபோட்டு கொண்டு மீன்களை வாங்கி செல்கின்றனர். அதன்படி மத்தி மீன் கிலோ 150 ரூபாய்க்கும், வஞ்சரம் மீன் 500 ரூபாய்க்கும், செமின் 300 ரூபாய்க்கும், நெத்திலி 300 ரூபாய்க்கும், சங்கரா மீன் 250 ரூபாய்க்கும், நண்டு 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!