செய்திகள் தேனி மாவட்ட செய்திகள் பள்ளிக்கு ஜாதி பெயர் இருக்க கூடாது… எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்… பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பினர் பிரச்சாரம்… Revathy Anish12 July 20240112 views தேனி மாவட்டம் போ. அணைக்கரைப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் கள்ளர் பள்ளி முன்பு தமிழக பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு மற்றும் பார்வர்டு பிளாக் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பள்ளிக்கு வந்த மாணவர்களிடம் இன்று பள்ளி விடுமுறை என கூறி அவர்களை வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, முன்னாள் நீதிபதி சந்துரு சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு கள்ளர் பள்ளிகளின் சீரமைப்பு, பெயர் மாற்றம் குறித்து அறிக்கை ஒன்றை தமிழக அரசுக்கு அனுப்பியிருந்தார். அந்த அறிக்கையில் தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் ஜாதி பெயர் இருந்தால் அதனை நீக்கி வேறு பெயராக மாற்ற வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர். மேலும் மாணவர்கள் வகுப்புபுறக்கணிப்பு போராட்டம் செய்ய மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர்களிடம் ஆதரவு கேட்டு பிரச்சாரமும் செய்து வருகின்றனர். இந்த போராட்டம் தேனி, திண்டுக்கல், மதுரை போன்ற மாவட்டங்களில் நடந்த அறிவித்துள்ளனர்.