செய்திகள் சென்னை மாவட்ட செய்திகள் சொத்துக்கு ஆசைப்பட்ட மகன்… தந்தைக்கு நேர்ந்த கொடூரம்… பூந்தமல்லி அருகே அரங்கேறிய சம்பவம்…!! Revathy Anish12 July 2024071 views சென்னை பூந்தமல்லி பாரிவாக்கம் பகுதியில் வசித்து வந்த ராஜேந்திரன் என்பவருக்கு 3 மகள்களும், 1 மகனும் உள்ளனர். வீட்டின் அருகியேயே ராஜேந்திரனுக்கு சொந்தமாக 4 சென்ட் இடம் இருந்தது. இதனை மகன் மற்றும் மகள்களுக்கு பங்கு போட்டு கொடுக்க வேண்டும் என அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால் வேன் டிரைவரான இவரது மகன் வெங்கடேசன்(28) எனக்கு அந்த நிலம் முழுவதும் வேண்டும் என தந்தையுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று ராஜேந்திரன் அந்த நிலத்தில் நின்று கொண்டிருந்தபோது அங்கு சென்ற வெங்கடேசன் நிலத்தை தன்பெயருக்கு எழுதி வைக்கும்படி தகராறில் ஈடுபட்டுள்ளார். அதற்கு ராஜேந்திரன் மறுத்ததால் தன்னுடைய வேனை எடுத்துக்கொண்டு தந்தை என்றும் பாராமல் வெங்கடேசன் அவர் மீது மோதியுள்ளார். இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய வெங்கடேசனை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.