கிருஷ்ணகிரி செய்திகள் மாவட்ட செய்திகள் தாய்க்கு உதவியாக இருந்த மகன்… மின்சாரம் தாக்கியதால் விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!! Revathy Anish8 July 2024080 views கிருஷ்ணகிரி மாவட்டம் வென்றவெள்ளி கிராமத்தில் வசித்து வந்த ஆனந்தன் என்பவர் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவரது தந்தை இறந்துவிட்ட நிலையில் ஆனந்தன் தாயாருக்கு உதவியாக பள்ளி விடுமுறை நாட்களில் கூலி வேலைக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். சம்பவத்தன்று அதே போல பள்ளி விடுமுறை என்பதால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் தண்ணீர் பாய்ச்ச சென்றிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஆனந்தன் மீது மின்சாரம் பாய்ந்தது. இந்த சம்பவத்தில் அவர் அங்கேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இதனையறிந்த ஊர் மக்கள் உடனடியாக போச்சம்பள்ளி போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில் காவல்துறையினர் ஆனந்தன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.