தனியாக இருந்த மாணவி… தூக்கில் தொங்கியதால் பரபரப்பு… கதறி அழுத பெற்றோர்…!!

சென்னை தாம்பரம் அருகே உள்ள பாரத் நகர் பகுதியில் ஆபிரகாம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு துணையாக மனைவியும் அவருடன் இருந்துள்ளார்.

இந்நிலையில் தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. 3-ஆம் ஆண்டு படித்து வரும் இவர்களது மகள் நித்ய ஜீவன் மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று நித்யஜீவன் சித்தி வெகு நேரமாக அவர்கள் வீட்டு கதவை தட்டியும் மாணவி கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது நித்திய ஜீவன் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற சேலையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நித்ய ஜீவனின் உடலை மீட்டு உடற்கூறாவிற்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றன.ர் இதனை அறிந்த நித்ய ஜீவனின் பெற்றோர் வீட்டிற்கு வந்து மகளின் உடலை பார்த்து கதறி அழுதது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

மீனம் ராசிக்கு…! தாராளமான பணவரவு கிடைக்கும்…!! வியாபாரத்தில் வளர்ச்சி நிலை இருக்கும்…!!

துலாம் ராசிக்கு…!! அற்புதமாக சிந்தித்து வெற்றி காண்பீர்கள்…!! குழப்பமான மனநிலை நீங்கும்…!!

மீனம் ராசிக்கு…! நம்பிக்கைகள் கண்டிப்பாக நிறைவேறும்..! அதிகாரம் செய்யக்கூடிய பதவி கிடைக்கும்…!!