Home செய்திகள் திடீரென உயிரிழந்த வாலிபர்… 2 மணிநேரம் கழித்து வந்த போலீஸ்… பேருந்து நிலையத்தில் கதறி அழுத சகோதரர்…!!

திடீரென உயிரிழந்த வாலிபர்… 2 மணிநேரம் கழித்து வந்த போலீஸ்… பேருந்து நிலையத்தில் கதறி அழுத சகோதரர்…!!

by Revathy Anish
0 comment

மயிலாடுதுறை மாவட்டம் சேத்தூர் பகுதியை சேர்ந்த அஜித்குமார் தனது சகோதரர் மற்றும் நண்பர்கள் 5 பேருடன் சென்னை தனியார் கல்லூரியில் நடைபெறும் கட்டுமான பணிக்காக சென்றனர். இவர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மாநகர பேருந்தில் செம்மஜ்சேரிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது சோழிங்கநல்லூர் சிக்னல் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது அஜித்குமார் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார்.

இதனால் அவரது சகோதரர் அருகில் இருந்த பேருந்து நிலையத்தில் அஜித்குமாரை கீழே இறங்கி மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயன்றார். ஆனால் அஜித்குமார் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்ததால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக ஆம்புலன்ஸ் மற்றும் போலீசாரை தொடர்பு கொண்டுள்ளார். இதனையடுத்து வெகு நேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் அங்கு வரவில்லை. மேலும் பேருந்து நிலையத்தில் நின்றவர்களும் உதவி செய்ய முன்வராததால் அஜித்குமாரின் தம்பி மனமுடைந்து கதறி அழுதுள்ளார்.

இதைத்தொடர்ந்து 2 மணி நேரம் கழித்து செம்மாஜ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அஜித்குமாரின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்குமார் இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அஜித்குமார் உடல் இருந்த 50 அடி தூரத்திலேயே செம்மஞ்சேரி காவல்நிலையம் இருந்தும் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.