கள்ளக்குறிச்சி செய்திகள் மாவட்ட செய்திகள் திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற வாலிபர்… வழியில் நடந்த விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!! Revathy Anish9 July 2024073 views கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூர் பகுதியில் சிவகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கொத்தனாரான இவருக்கு வருகின்ற 12-ஆம் தேதி திருமணம் நடைபெற்ற இருந்த நிலையில் உறவினர் மற்றும் நண்பர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து வந்தார். இந்நிலையில் இவர் நேற்று உறவினர் ஒருவருக்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது சேலம் மெயின் ரோட்டில் உள்ள அரிசி ஆலை அருகே சென்ற போது இருசக்கர வாகனம் நிலை தடுமாறியதில் சிவகுமார் கீழே விழுந்துள்ளார். இந்த விபத்தில் பலத்தகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் சிவக்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.