உலக செய்திகள் செய்திகள் தேவாலயத்தில் நடந்த பயங்கரம்… 20 பேர் பலி… அதிபர் புதின் கடும் கண்டனம்… Revathy Anish25 June 2024078 views ரஷ்யாவில் உள்ள தேவாலயம் ஒன்றில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதனால் ஏராளமான மக்கள் அங்கு குடியிருந்தனர். இந்த சமயத்தில் பயங்கரவாதிகள் சிலர் தேவாலயத்தின் உள்ளே நுழைந்து பாதிரியாரை கழுத்தை அறுத்து கொலை செய்ததோடு, தடுக்க முயன்ற காவலர்களையும் சுட்டுக்கொலை செய்தனர். மேலும் அப்பகுதியில் இருந்த சில காவல் நிலையங்கள் மற்றும் தேவாலயங்கள் மீதும் பயங்கரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டனர். இதில் போலீசார் உட்பட 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பயங்கரவாதிகளை எதிர்த்து ராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் ஐந்து பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்காத நிலையில் கண்டனம் தெரிவித்த ரஷ்ய அதிபர் புதின் மூன்று நாட்கள் துக்க தினமாக அனுசரிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.