விளையாடி கொண்டிருந்த சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்ற வியாபாரி… போக்சோவில் கைது…!!

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியில் பீர்முகமது(60) என்பவர் வசித்து வருகிறார். மீன் வியாபாரியான இவர் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து வந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பயந்த சிறுமி அங்கிருந்து உடனடியாக அவரது வீட்டிற்கு ஓடியுள்ளார்.

இது குறித்து சிறுமி அவரது பெற்றோரிடம் கூறினார். இதற்கிடையே பீர்முகமது வீட்டில் இருந்து தப்பி ஓடி உள்ளார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் தப்பியோடிய பீர்முகமதை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!