Home செய்திகள் கள்ளகாதலியுடன் குடும்பம் நடத்திய கணவனை அழைத்த மனைவி… அடுத்து நடத்த விபரீதம்…!!

கள்ளகாதலியுடன் குடும்பம் நடத்திய கணவனை அழைத்த மனைவி… அடுத்து நடத்த விபரீதம்…!!

by Revathy Anish
0 comment

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் மணிகண்டன்-சிவரஞ்சனி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு மணிகண்டனுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இது அவரது குடும்பத்தினருக்கு தெரிய வந்ததால் மணிகண்டன் யாருக்கும் தெரியாமல் கள்ளகாதலியுடன் சேலம் வளையசெட்டியூருக்கு சென்று அங்கு குடும்பம் நடத்தி வந்தார்.

இந்நிலையில் கணவனை காணாத சிவரஞ்சனி மற்றும் அவருடைய உறவினர்கள் மணிகண்டனை தேடி வந்தனர். இதனையடுத்து மணிகண்டன் வளையசெட்டியூரில் இருப்பதாக தகவல் கிடைத்த நிலையில் சிவரஞ்சனி மற்றும் உறவினர்கள் அங்கு சென்ற மணிகண்டனை மீண்டும் வீட்டிற்கு வருமாறு அழைத்தனர்.

அப்போது அங்கிருந்து சென்ற மணிகண்டன் பூலாம்பட்டி வாய்க்கால் கரை பகுதியில் விஷம் அருந்தி மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மணிகண்டன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது குறித்து பூலாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கள்ளகாதலியுடன் குடும்பம் நடத்தி வந்த மணிகண்டன் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.