செய்திகள் சென்னை மாவட்ட செய்திகள் கள்ளக்காதலனுடன் சென்ற மனைவி… குழந்தையை கொன்ற தந்தை… விபரீத முடிவால் சோகம்…!! Revathy Anish17 July 20240107 views சென்னை பூந்தமல்லி அருகே உள்ள சென்னீர்குப்பம் பகுதியில் தச்சு தொழிலாளியான மோகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பரிமளா என்ற மனைவியும், நட்சத்திரா(5) என்ற மகளும் இருந்தனர். இந்நிலையில் பரிமளா அவர் உறவினர் ஒருவருடன் கள்ளக்காதலில் இருந்தது மோகனுக்கு தெரியவந்ததால் அவர் மனைவியை கண்டித்துள்ளார். இதனால் அவருடன் வாழ விருப்பம் இல்லாத பரிமளா நட்சத்திராவை அழைத்து கொண்டு கள்ளக்காதலுடன் சென்றுள்ளார். இதனை அறிந்த மோகன் உடனடியாக பரிமளா இருக்கும் இடத்திற்கு சென்று மகள் நட்சத்திராவை தன்னுடன் அழைத்து வந்தார். ஆனாலும் பரிமளா தனக்கு துரோகம் செய்ததை எண்ணி மோகன் மன உளைச்சலில் இருந்துள்ளார். சம்பவத்தன்று இரவு மனமுடைந்த அவர் மகள் நட்சத்திரவிற்கு விஷம் கலந்த உணவு கொடுத்துவிட்டு, அவரும் வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக பூந்தமல்லி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மோகன் வீட்டுக்கு கதவை உடைத்து உள்ளே இறந்து கிடந்த மோகன் மற்றும் நட்சத்திராவை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது