கடலூர் செய்திகள் மாவட்ட செய்திகள் பேருந்தில் பிரசவ வலியால் துடித்த பெண்… சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தை… மூதாட்டிக்கு குவியும் பாராட்டுகள்…!! Revathy Anish28 June 2024078 views கடலூர் மாவட்டம் திட்டக்குடி-கொத்தனூர் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்றில் நிறைமாத கர்பிணி ஒருவர் பயணம் செய்துள்ளார். அவருக்கு திடீரென பிரசவ வலி வந்துள்ளது. இதனை அறிந்த பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநர் உடனடியாக சாலை ஓரத்தில் பேருந்தை நிறுத்தினர். இதனையடுத்து பேருந்தில் இருந்த மூதாட்டி அங்கிருந்தவர்களின் உதவியுடன் பேருந்திலேயே அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளார். அதில் அவருக்கு ஆண் குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்துள்ளது. தற்போது அவர்கள் நலமாக உள்ளனர். மேலும் துரிதாமாக செயல்பட்ட பேருந்து ஓட்டுநர், நடத்துனர் மற்றும் மூதாட்டிக்கு அனைவரும் பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.