லிப்டில் ஏறிய தொழிலாளி… கயிறு அறுந்ததால் விபரீதம்… குடியிருப்பில் ஏற்பட்ட சோகம்…!!

சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான கணேசன் என்பவர் அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 10-வது தளத்தில் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் தரைதளத்திற்கு வருவதற்காக லிப்டை பயன்படுத்தியதாக தெரிகிறது. அப்போது லிப்டின் கயிறு அறுந்து விழுந்ததில் கணேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த்துள்ளார்.

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கணேசனை உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயன்றனர். அப்போது அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் போலீசாரை தடுத்தி நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் குடியிருப்பில் சரியான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை என தெரிவித்தனர்.

பின்னர் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பிய போலீசார் கணேசனின் உடலை எடுத்து சென்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்வம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!