செய்திகள் தஞ்சாவூர் மாவட்ட செய்திகள் அரசு பேருந்தில் பெண்களுக்கு மரியாதை இல்லை… நடத்துனர் மீது புகார்… சாலை மறியலால் பதற்றம்… Revathy Anish2 July 20240101 views தஞ்சாவூர் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பெண் செவிலியர்கள், ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள், பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களில் பலரும் தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் அரசு பேருந்தில் பயணம் செய்து வருவார்கள். இந்நிலையில் இன்று காலை 6.30 மணிக்கு வழக்கம்போல வேலைக்கு செல்ல செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைக்கு செல்லும் அரசு பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த பேருந்து ஒன்றில் ஏற முயன்ற போது நடத்துனர் இந்த பேருந்து கிளம்புவதற்கு தாமதம் ஆகும், எனவே வேறு பேருந்தில் ஏறி கொள்ளுமாறு கூறியுள்ளார். இதனை கேட்ட ஊழியர்கள் அடுத்து வந்த அரசு பேருந்தில் ஏற முயன்றபோது அந்த பேருந்தில் இருந்த நடத்துனரும் அதையே கூறி அவர்களை ஏறவிடாமல் தடுத்துள்ளார். இதை கேட்டு ஆத்திரம் அடைந்த மருத்துவமனை பெண் பணியாளர்கள் பேருந்து நிலைய நுழைவு வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பேருந்துகள் அனைத்தும் வெளிய செல்ல முடியாமல் பேருந்து நிலையத்தில் நின்றது. இதுகுறித்து தகவலறிந்து சென்ற போக்குவரத்து கிளை மேலாளர் சந்தானராஜ் மற்றும் மேற்கு போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் மகளிர் அரசு பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம் என்பதால் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் எங்களை அலைக்கழிப்பதாகவும், மரியாதை இல்லாமல் நடத்துவதாகவும் கூறினார். இதற்கு தீர்வு காணும் வரை நாங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம் என தெரிவித்தனர். இதனையடுத்து சந்தானராஜ் சுமார் 1.30 நேரம் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்பு அவர்களை சாமாதானப்படுத்தி மாற்று பேருந்தில் ஏற்றி அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பதற்றம் நிலவியது.