செய்திகள் சென்னை மாநில செய்திகள் திருவேங்கடம் என்கவுண்டர்… உயர் அதிகாரிகளின் விசாரணை தேவை… அண்ணாமலை வலியுறுத்தல்…!! Revathy Anish14 July 2024091 views சென்னை பெரம்பூரில் வைத்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த வழக்கில் சரணடைந்த திருவேங்கடம் என்பவரை போலீசார் என்கவுண்டரில் சுட்டு கொலை செய்துள்ளனர். இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறும் போது கொலை செய்ததாக தாமாகவே வந்து சரணடைந்த ஒருவர் எப்படி தப்பியோட முயற்சித்தார் என்று சொல்வது சந்தேகத்தை எழுப்புகிறது என கூறியுள்ளார். மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தி.மு.கவை சேர்ந்த 3 பேர் சம்மந்தப்பட்டதால் இந்த முறையாக விசாரிக்காமல் உண்மையை மறைக்க உண்டான வேலைகளை செய்கிறார்களா என்ற கேள்வியை எழுப்பினார். எனவே திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டது குறித்து உயர் அதிகாரிகள் முறையாகவும், நியாயமாகவும் விசாரணை செய்ய வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.