செய்திகள் மாநில செய்திகள் இது நமக்கு கிடைத்த பெருமை… அகழாய்வு பணிகள் குறித்து முதல்வர் வெளியிட்ட பதிவு…. Revathy Anish22 July 20240117 views தொல்லியல் துறையினரின் சார்பில் பல்வேறு பகுதிகளில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். அதில் கண்டுபிடிக்கப்படும் பொருட்கள் மூலம் தமிழரின் பாரம்பரிய வரலாற்றையும், பண்பாட்டையும் அறிவியல் சான்றோடு இந்த உலகுக்கு எடுத்துக்காட்டுகிறோம். அந்த வகையில் பாசிமணிகள், மூடியுடன் கூடிய பானை, சுடுமண் சிற்பம், சுடுமண் கிண்ணங்கள், உறைகிணறு, தொட்டி, முத்திரை காசுகள், சிவப்பு வண்ண கொள்கலன், தமிழி பானை ஓடு, இரும்பிலான ஏர்கலப்பை கொழுமுனை, தக்களி, தந்தத்தாலான பகடைக்காய், உணவு கிண்ணம், செம்பினால் ஆன அஞ்சனக்கோல் ஆணி என நம் பாரம்பரியத்தை கூறும் வகையில் பல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பல தடைகளை கடந்து நாம் தமிழரின் நாகரிக தரவுகளை சேகரித்து வருகிறோம். இது நமக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை எனவும், தமிழர் வரலாற்றை சரியான திசையில் செல்வதை உறுதி செய்கிறது எனவும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.