அரசியல் செய்திகள் செய்திகள் மாநில செய்திகள் பா.ம.க.வினருக்கு இதுதான் வேலையே… தி.மு.க.விற்கு ஆதரவாக களமிறங்கிய அமைச்சர்கள்… துரைமுருகன் பேட்டி…!! Revathy Anish2 July 20240121 views விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து அப்பகுதியில் தீவிரமாக அரசியல் கட்சியினர் வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் தி.மு.க. சார்பில் நிற்கும் வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, சி.வெ. கணேசன், சேகர்பாபு ஆகியோர் களத்தில் இறங்கி வாக்கு சேகரித்தனர். மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் மக்களிடையே நல்லெண்ணத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், எனவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க. மாபெரும் வெற்றி பெறுவோம் என துரைமுருகன் கூறினார். மேலும் வன்முறையில் ஈடுபடுவது பா.ம.க.கட்சியினருக்கு வேலையாகி விட்டது என கூறியுள்ளார்.