செய்திகள் தேசிய செய்திகள் அரசு பள்ளிகளில் நேரம் மாற்றம்… புதுச்சேரி கல்வித்துறை அதிகாரி அறிவிப்பு…!! Revathy Anish9 July 2024081 views புதுச்சேரியில் வருகின்ற 15-ஆம் தேதி காமராஜர் பிறந்தநாள் அன்று அரசு பள்ளிகளின் நேரங்கள் மாற்றப்படுவதாக கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி தெரிவித்துள்ளார். புதுச்சேரி அரசு பள்ளிகளில் இதுவரையிலும் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 3.45 மணிவரை இயங்கி வந்தது. தற்போது சிபிஎஸ்இ பாடத்திட்டம் நடைமுறைக்கு வந்ததால் அதற்கு ஏற்றாற்போல் 8 பாட வேளைகளாக பள்ளிகள் செயல்படவுள்ளது. அதன் அடிப்படையில் பள்ளிகள் காலை 9 மணிக்கு தொடங்கப்பட்டு 4.20 மணி வரை செயல்பட உள்ளது. மதியம் 12.25 மணி முதல் 1.35 மணி வரை உணவு இடைவெளியும் காலை, மாலை இரு முறை 10 நிமிடங்கள் இடைவெளியும் விடப்படும். இந்த சுற்றறிக்கை அனைத்து அரசு பள்ளி முதல்வருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.