கோடை வெயிலில் இருந்து உங்கள் ஸ்மார்ட்போனை பாதுகாக்க சில குறிப்புகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
நேரடியாக சூரிய ஒளியில் வைத்து ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதை தவிர்த்திடுங்கள். அதிகப்படியான வெளிச்சத்தினால் ஸ்மார்ட் போனின் திரை வெளிச்சம் கூடுதலாக இருக்கும். இதனால் உங்கள் ஸ்மார்ட்போன் அதிகம் சூடாகும்.
கோடை காலத்தில் உங்கள் ஸ்மார்ட் போனில் கேம் விளையாடுவதையும் வீடியோ பதிவு செய்வதையும் தவிர்த்திடுங்கள். இந்த காரணங்களால் ஸ்மார்ட்போன் அதிகம் சூடாகும்.
உங்கள் ஸ்மார்ட் போனில் நீங்கள் பயன்படுத்தாத செயலிகள் பேக்ரவுண்டில் செயலில் இருக்கிறதா என்பதை ஆராய்ந்து அதனை ஆப் செய்வது சிறப்பு. அதோடு ஸ்மார்ட்போனை பயன்படுத்தாத சமயத்தில் aeroplane mode-ல் வைத்திருப்பது ஆக சிறந்தது.
ஸ்மார்ட் போனை சார்ஜ் போட்டவாறு பயன்படுத்த வேண்டாம் அதோடு விலை குறைந்த சார்ஜர்களை வாங்கி பயன்படுத்த வேண்டாம் இவை உங்கள் ஸ்மார்ட் ஃபோனை அதிக சூடாக்கி சேதம் அடைய செய்யும்.