கன்னியாகுமரி செய்திகள் மாவட்ட செய்திகள் விடுமுறை தினத்தில் டூர்… குமரிக்கு படையெடுத்த சுற்றுலாவின்… பாதுகாப்பு பணியில் போலீசார்…!! Revathy Anish21 July 2024078 views கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்கள் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. அங்கு உள்ள முக்கடல் சங்கமிக்கும் இடம், சூரியன் உதிக்கும் கட்சி, திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் நினைவு மண்டபம், காந்தி மண்டபம், அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவில், கலங்கரை விளக்கம், காமராஜர் நினைவு மண்டபம், அரசு பழத்தோட்டம், சுற்றுசூழல் பூங்கா என பல இடங்கள் உள்ளன. இங்கு தினந்தோறும் வெளி மாநிலம், வெளி நாடு என பல பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்றும் இன்றும் விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் குமரி கடலுக்கு படையெடுத்து வருகை தருகின்றனர். அவர்கள் அப்பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சென்று விடுமுறையை கொண்டாடி வருகின்றனர். மேலும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் இருப்பதால் அப்பகுதியில் கடலோர போலீசார் பாதுகாப்பு பணிக்காக ஈடுபட்டுள்ளனர்.