செய்திகள் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாகன நெரிசல்… சாலை விரிவாக்க திட்டம்… மாநகராட்சி தகவல்…!! Revathy Anish16 July 2024041 views தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் குறித்த நேரத்தில் அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசித்து போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள முக்கிய சாலைகளை விரிவாக்குவது குறித்து முடிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையில் முதல் கட்டமாக டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையை 30.5 மீட்டர் அகலப்படுத்தவும், லட்டிஸ் பாலம் சாலை 30.5 மீட்டர் ஆகவும், நியூ ஆவடி சாலை மற்றும் பேப்பர் மில் சாலை 18 மீட்டராகவும் அகலப்படுத்த உள்ளனர். இதற்காக அப்பகுதியி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி விரைவில் விரிவாக்கப் பணிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.