செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர் பெற்றோர் எதிர்ப்புடன் காதலியை கரம் பிடித்ததால் சோகம்… சிவகாசியில் படுகொலை…!! Revathy Anish25 July 2024080 views விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள இந்திரா நகரில் கார்த்திக் பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சிவகாசியை சேர்ந்த நந்தினி என்ற பெண்ணை பெற்றோர் எதிர்ப்புடன் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களின் திருமணத்திற்கு நந்தினி சகோதரர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திருமணம் முடிந்து நந்தினி சிவகாசி பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். தினமும் கார்த்திக் பாண்டியன் நந்தினியை சூப்பர் மார்க்கெட் காலையில் அழைத்து சென்று, இரவில் வீட்டிற்கு அழைத்து வருவதை வழக்கமாக வைத்திருந்தார். சம்பவத்தன்று இரவு கார்த்திக் பாண்டியன் வழக்கம் போல நந்தினியை வீட்டிற்கு அழைத்து வருவதற்காக சூப்பர் மார்க்கெட் சென்றுள்ளார். அப்போது சூப்பர் மார்க்கெட் முன்பு கார்த்திக் பாண்டியனை சிலர் அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து சிவகாசி துணை சூப்பிரண்டு போலீஸ் சுப்பையா தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கொலை நடந்த இடத்தை பார்வையிட்டனர். மேலும் வழக்கு பதிவு செய்து கார்த்திக் பாண்டியனை ஆணவப் படுகொலை செய்த நந்தினியின் சகோதரர்கள் பாலமுருகன், தனபால், மற்றும் அவரது நண்பர் சிவா ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நந்தினி கணவரின் உடலைப் பார்த்து கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.