வாலிபரின் விபரீத முடிவு… தூங்கி கொண்டிருந்த நண்பர்களுக்கு நேர்ந்த சோகம்… 3 பேர் பலி…!!

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கொத்துகவுண்டன் புதூர் பகுதியில் 7 லாரி ஓட்டுநர்கள் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இவர்களில் தேனி மாவட்டத்தை சேர்ந்த அழகுராஜா என்பவர் சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட லாரி விபத்தினால் கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இரவு இவர் வீட்டில் இருந்த பெட்ரோலை எடுத்து திடீரென தீக்குளித்துள்ளார்.

இதனையடுத்து அவர் கையில் வைத்திருந்த பெட்ரோல் கேன் வீட்டிற்குள் விழுந்ததால் அங்கிருந்து மற்ற பொருள்களும் தீப்பிடித்து பயங்கரமாக எரிய தொடங்கியது. இந்த தீ விபத்தினால் அங்கு தூங்கிக் கொண்டிருந்த மற்ற டிரைவர்கள் மீதும் தீப்பிடித்தது. இதில் அழகுராஜா உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற காவல்துறையினர் படுகாயம் அடைந்த 4 பேரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!