கிருஷ்ணகிரி செய்திகள் மாவட்ட செய்திகள் 206 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்… மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி உத்தரவு…!! Revathy Anish18 July 2024075 views கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர், பர்கூர், ஊத்தங்கரை, தேன்கனிக்கோட்டை ஆகிய 5 உட்கோட்டங்களில் பல்வேறு காவல்நிலையங்கள் செயல்பட்டு வருகின்றது. இங்கு இன்ஸ்பெக்டர், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர், ஏட்டு, போலீஸ் என பல நிலைகளில் காவல்துறையினர் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் தங்களது குடும்ப சூழ்நிலை கருதியும், வேறு காரணங்களுக்காகவும் இடமாறுதல் கோரி மாவட்ட சூப்பிரண்டு அதிகாரியிடம் மனுக்களை வழங்கி வந்தனர். அந்த மனுக்களை பரிசளித்த மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி தங்கதுரை சுமார் 206 காவல் துறை அதிகாரிகளை வேறு வேறு உட்கோட்ட காவல் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த இடமாற்றம் வழக்கமாக செயல்படுத்தும் நடைமுறைதான் என தெரிவித்துள்ளார்.