கள்ளக்குறிச்சி செய்திகள் மாவட்ட செய்திகள் ஆட்சியர் அலுவலகம் முன்பு திருநங்கைகள் சாலை மறியல்… அதிகாரிகள்பேச்சுவார்த்தை…!! Revathy Anish18 August 2024095 views கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 20-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று திருநங்கைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் கொசப்பாடி அருகே நத்தம் குளம் பகுதியில் ரேணுகா என்ற திருநங்கை வசித்து வருகிறார். இந்நிலையில் கொச பாடி பகுதியை சேர்ந்த ஒருவர் ரேணுகாவின் வீட்டிற்கு செல்லும் பாதையை ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இது குறித்து ரேணுகா பல்வேறு முறை கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் தாசில்தாரிடமும் புகார் மனு அளித்துள்ளார். இதுவரையிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே திருநங்கைகள் ஒன்றிணைந்து சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் காவல்துறையினர் திருநங்கை ரேணுகா மற்றும் அவரது உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.