இராமநாதபுரம் செய்திகள் மாவட்ட செய்திகள் புதிய பாம்பன் பாலத்தில் சோதனை ஓட்டம் வெற்றி… அதிகாரிகள் தகவல்…!! Revathy Anish22 August 20240111 views ராமேஸ்வரத்தில் சுமார் 545 கோடி ரூபாய் செலவில் பாம்பன் ரயில் பாலம் கட்டப்பட்டு அதன் இறுதிப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. புதிதாக அமைக்கப்பட்ட பாலத்தில் நேற்று சரக்கு ரயிலை இயக்கி சோதனை செய்துள்ளனர். சுமார் 11 பெட்டிகள் கொண்ட இந்த சரக்கு ரயிலை 20 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை இயக்கி வெற்றிகரமாக சோதனை ஓட்டத்தை முடித்தனர். மேலும் பாம்பன் தூக்குப்பாலம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.