செய்திகள் மதுரை மாவட்ட செய்திகள் வேலையினால் வந்த பிரச்சனை… கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி… அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்…!! Revathy Anish12 July 2024084 views மதுரை மாவட்டம் வெள்ளியங்குன்றம் பகுதியில் வசித்து வரும் செந்தில் குமார் என்பவருக்கு மாலதி என்ற மனைவி உள்ளார். செந்தில்குமார் ஆட்டோ ஓட்டி வந்த நிலையில், அவரது மனைவி அப்பகுதியில் உள்ள ஜூஸ் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மனைவி வேலைக்கு செல்வது செந்தில்குமாருக்கு பிடிக்காததால் வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறியுள்ளார். அதை மாலதி கேட்காததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு இவர்களுக்குள் நடந்த தகராறில் ஆத்திரம் அடைந்த மாலதி அடுப்பில் கொதித்து கொண்டிருந்த எண்ணெயை எடுத்து செந்தில்குமார் மீது ஊற்றியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அப்பன்திருப்பதி காவல்துறையினர் மாலதி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.