கோயம்புத்தூர் செய்திகள் மாவட்ட செய்திகள் கள்ளக்காதலை கைவிட முயற்சி… இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல்…4 பிரிவுகளின் கீழ் வாலிபர் கைது…!! Revathy Anish2 July 2024067 views கோயம்புத்தூர் மாவட்டம் உக்கடம் பகுதியில் 25 வயதான இளம்பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில் அந்த பெண்ணுக்கு காய்கறி மார்க்கெட்டில் வியாபாரம் செய்யும் முகமது பிலால்(27) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் இவர்களிடையே இருந்து வந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இவர்கள் இருவரும் அவ்வப்போது நெருக்கமாகவும் இருந்துள்ளனர். ஒரு கட்டத்திற்கு மேல் இது தவறு என உணர்ந்த பெண் பழக்கத்தை கைவிட நினைத்துள்ளார். ஆனால் முகமது பிலால் தன்னுடன் நெருக்கமாக இருக்காவிட்டால் கள்ளக்காதல் குறித்து அவரது கணவரிடம் கூறிவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்த அந்த பெண் முகமது பிலாலுடன் செல்போனில் பேசுவதை முற்றிலுமாக தவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் அவரை தகாத வார்த்தையில் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த மிரட்டலை கேட்டு அதிர்ச்சியடைந்த இளம்பெண் உடனடியாக உக்கடம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து முகமது பிலாலை கைது செய்தனர்.