செய்திகள் சென்னை மாவட்ட செய்திகள் தகராறில் தாக்கிக்கொண்ட இருவர்… கொத்தனார் பலி… போலீசார் விசாரணை…!! Revathy Anish21 July 20240127 views சென்னை பள்ளிக்கரணை ராஜீவ் காந்தி தெருவில் கொத்தனாராக பணிபுரிந்து வரும் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் குடிபோதையில் அப்பகுதியில் தகராறில் ஈடுபட்டார். இதனை அதே பகுதியில் கொரியர் நிறுவனத்தில் பணி புரிந்து வரும் செந்தில்குமார் என்பவர் தட்டி கேட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் சக்திவேல் மூக்கில் அடிபட்டதால் அவர் அங்கேயே மயங்கி கீழே விழுந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சக்திவேல் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த பள்ளிக்கரணை போலீசார் செந்தில்குமாரை கைது செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.