செய்திகள் திருப்பூர் மாவட்ட செய்திகள் துணை முதலமைச்சர் ஆகும் ஆற்றல் உதயநிதி ஸ்டாலினுக்கு உள்ளது… அமைச்சர் பேட்டி…!! Revathy Anish21 July 20240111 views திருப்பூருக்கு சென்ற தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது, தற்போது விளையாட்டுத் துறை அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சர் ஆக்குவது குறித்து சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு உறுதுணையாக இருந்து இந்த அரசை சிறப்பாக வழி நடத்தும் ஆற்றல் உதயநிதி ஸ்டாலின்அவர்களிடம் உள்ளது என அமைச்சர் சாமிநாதன் கூறியுள்ளார். எனவே உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆவதில் எனக்கு ஆட்சேபனை ஏதும் இல்லை என கூறினார். மேலும் அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டதை போல் திமுக ஆட்சியில் நடைபெறவில்லை எனவும், அவர்களை போல நாங்கள் துப்பாக்கி சூடும் நடத்தவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.